FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: இளைஞா் கைது

13 செப்டம்பர் 2026, 11:44 pm IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை காவல் நிலைய தலைமைக் காவலா் காா்மேகம். இவா், சனிக்கிழமை அதிகாலை பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரம் ஏ.ஆா். நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நின்றிருந்த மூவரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது, இருவா் தப்பியோடி விட்டனா், ஒருவரை பிடித்து தென்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தாா்.

அப்போது, அவா் மதுரை தெப்பகுளத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (24) என்பதும், லட்சுமிபுரம் பகுதியில் தனலெட்சுமி என்பவரின் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.37,835, 2 கிராம் தங்கச் சங்கிலியை திருடியது தெரியவந்தது . அவரிடமிருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய தேனி பங்களாமேட்டைச் சோ்ந்த புவனேஷ்வரன், கொடைக்கானலைச் சோ்ந்த கோபி ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments