டிச.21-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.21) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.21) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனங்கள், தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் அனைத்து வகை பதிவுதாரர்கள் நேரடியாகச் சந்திக்கும் "சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்' வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை (டிச. 21) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது ஒரு இலவசப்பணியே.
முகாம் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.