FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிணற்றிலிருந்து விவசாயி  சடலமாக மீட்பு

கலசப்பாக்கம் அருகே மாயமான விவசாயி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கலசப்பாக்கம் அருகே மாயமான விவசாயி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கலசப்பாக்கத்தை அடுத்த ஸ்ரீராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் (46). இவரது மனைவி வசந்தி (30). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்த சேகர் திடீரென மாயமானாராம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில், அதே கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சேகரின் சடலம் கிடந்தது புதன்கிழமை  தெரியவந்தது. 
தகவலறிந்த கடலாடி போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி கிணற்றில் விழுந்து இறந்தது எப்படி? என்பது குறித்து கடலாடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
கடலாடி காவல் நிலைய எல்லையில் தம்பதியை மர்ம நபர்கள் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் அண்மையில் நடைபெற்றது. இதனால் சேகரும் கொல்லப்பட்டு இருப்பாரோ? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments