பண்ணை பயிற்சிப் பள்ளி தொடக்கம்
வெம்பாக்கம் வட்டார வேளாண் துறை சார்பில், அழிவிடைதாங்கி கிராமத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற
வெம்பாக்கம் வட்டார வேளாண் துறை சார்பில், அழிவிடைதாங்கி கிராமத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பயிற்சிப் பள்ளி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சா.இல.ருத்ரமூர்த்தி தலைமையில் இந்தப் பண்ணை பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. உதவி தொழில்நுட்ப மேலாளர் நடராஜன் பயிற்சியை தொடக்கி வைத்து பேசினார்.
உதவி வேளாண்மை அலுவலர் லஷ்மிகாந்தன், நெல் விதைப்பு முதல் அறுவடை வரை செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் ரா.சுப்பிரமணியன், நெல் பயிரை தாக்கும் பூச்சிகள், நோய்கள் பற்றியும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் தெரிவித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் கு.கங்காதரன், நெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள், நிலம் தயார் செய்தல் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் சு.ரேணுகாதேவி தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் தெரிவித்தனர். இந்தப் பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.