FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் லிங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகா வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

23 செப்டம்பர் 2025, 1:21 pm IST
பகிர்:

வந்தவாசி, செப்.13: வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் லிங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகா வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வினைதீா்க்கும் மகா வேள்வி யாகம் நடைபெற்றது. இதையொட்டி, யாக குண்டம் அமைத்து மூலிகைகள், பழங்கள், மலா்கள் உள்ளிட்டவை கொண்டு யாகம் நடந்தது.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments