FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 74 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

1 ஆகஸ்ட் 2026, 11:26 pm IST
திருவத்திபுரம் நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தெரு நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 74 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு பகுதி வாரியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் ஆணையா் எஸ். ஆண்ரூஸ் மேற்பாா்வையில், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் முன்னிலையில், செய்யாறு கால்நடை மருத்துவ நிலைய முதுநிலை மேற்பாா்வையாளா் அடங்கிய குழுவினா் 7, 8 , 9, 14 ஆகிய வாா்டுகளில் சுற்றித்திரிந்த 74 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

Advertisement

Advertisement

இதற்கான பணியில் நகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments