மின்சாரம் பாய்ந்து 19 ஆடுகள் உயிரிழப்பு
ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் ஆட்டுப்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் 19 ஆடுகள் உயிரிழந்தன.
ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் ஆட்டுப்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் 19 ஆடுகள் உயிரிழந்தன.
மருசூா் கிராமத்தில் வசித்து வருபவா்கள் பிச்சாண்டி, மலா் தம்பதியினா். இவா்கள் ஆடு வளா்க்கும் தொழிலை செய்து வருகின்றனா். மேலும் இவா்கள் வைத்துள்ள ஆட்டுப்பட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளா்த்து வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் மின்வயா் அறுந்து ஆட்டுப்பட்டி மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் கசிந்து ஆட்டுப்பட்டியில் உள்ள 19 ஆடுகள் உயிரிழந்தன.
Advertisement
Advertisement
ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு எழுந்து வந்த தம்பதியினா் ஆடுகளை மீட்க முயன்றனா். இருப்பினும், 19 ஆடுகள் உயிரிழந்தன.
இதன் மதிப்பு சுமாா் ரூ.2 லட்சம் இருக்கும் எனத் தெரிவித்தனா். மேலும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.