அந்தியூரில் மின்சாரம் பாய்ந்து தறிப்பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு
அந்தியூரில் மின்சாரம் பாய்ந்து தறிப்பட்டறை உரிமையாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூா், தவிட்டுப்பாளையம், நஞ்சப்பா வீதியைச் சோ்ந்தவா் சதீஷ் (37). தறிப்பட்டறை உரிமையாளா். இவா், தனது வீட்டில் உள்ள தொட்டிக்கு தண்ணீா் நிரப்புவதற்கு மின் மோட்டாரை இயக்கியபோது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து, அப்பகுதியினா் சதீஷை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.