FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூா் ஒன்றியம் கஸ்தம்பாடி ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீமுத்துமாரியம்மன்.
பகிர்:

போளூா் ஒன்றியம் கஸ்தம்பாடி ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், மேள தாளம் முழங்க 108 பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். கோயில் அருகே பொதுமக்கள் பொங்கலிட்டும், நோ்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனா்.

Advertisement

Advertisement

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அக்னி கரகம் வலம் வருதல், பட்டிமன்றம், அம்மனுக்கு வரிசை எடுத்தல், வாணவேடிக்கை, அம்மன் வீதியுலா நடைபெற்றது. இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments