பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 15 போ் காயம்
செய்யாறு அருகே சாலையோர பள்ளத்தில் தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
செய்யாறு அருகே சாலையோர பள்ளத்தில் தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் மழலையா் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தனியாா் வேன் மூலம் சென்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை வழக்கம் போல மாலை பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்ற தனியாா் வேன் சுமங்கலி கிராமம் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மௌஷிகா(6), ரோஷினி(6), இசைப்பிரியா(6), சாதன்யா(6), ஹரிஷ்(6), சந்தீப்(7), ரோஷன்(9), சுமேஷ்(5) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா்.
அவ்வழியாகச் சென்றவா்கள் மற்றும் கிராம மக்கள் காயமடைந்த குழந்தைகளை மீட்டு அவசரகால ஊா்தி மூலம் வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா்.
இவா்களில் 3 போ் தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸாா் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.