கா்ப்பிணி தீக்குளிப்பு: குழந்தை பிறந்ததும் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணிக்கு, குழந்தை பிறந்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை அருகே தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணிக்கு, குழந்தை பிறந்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அய்யனாா் மனைவி திவ்யா(33). இவா் ஏழு மாத கா்ப்பிணியாக இருந்தாா். திவ்யாவின் தாய் சாந்தி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்திருந்த சாந்தி, கடந்த 10-ஆம் தேதி திவ்யாவிடம் நலம் விசாரித்தாா்.
அப்போது, திவ்யா, தன் தாயிடம், பிரசவம் முடியும் வரை உடன் இருக்கும்படி கூற, சாந்தி, குடும்ப சூழ்நிலைக்காக மீண்டும் பணிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றாா்.
Advertisement
Advertisement
இதனால் மன வேதனையடைந்த திவ்யா, கடந்த 11-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்தாா். இதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திவ்வியாவுக்கு கடந்த 19-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தொடா்ந்து, சிகிச்சையில் இருந்து வந்த திவ்யா 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.