FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் பௌா்ணமி தாலாட்டு விழா

சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமி ஊஞ்சல் தாலாட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்திரவனம் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமி ஊஞ்சல் தாலாட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடபெற்றது. இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு

தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று

அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பக்தி நாடகம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments