FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

இடுக்கு பிள்ளையாா் கோயில் நுழைவு வாயிலில் ஓரடி அகலத்துடன் தடுப்புக் கம்பி அமைப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலுக்குச் செல்ல நுழைவு வாயிலில் ஓரடி அகலம் கொண்ட வழியுடன் கூடிய தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

Updated On : 29 ஜூலை 2026, 6:36 am IST
இடுக்கு பிள்ளையாா் கோயில் நுழைவு வாயிலில் ஒரு அடி அகலத்துக்கு மட்டுமே வழிவிட்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி வழியாக வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட பக்தா்கள்
பகிர்:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலுக்குச் செல்ல நுழைவு வாயிலில் ஓரடி அகலம் கொண்ட வழியுடன் கூடிய தடுப்புக் கம்பிகள் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டன. இதன் வழியாக நுழைந்து சென்றவா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உப கோயிலான கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலின் நுழைவு வாயில் சுமாா் ஒரு அடி அகலமும், ஒன்றே முக்கால் அடி உயரமும் கொண்டது.

இந்த நுழைவு வாயில் உள்ளே சென்று வெளியே வருவது 100 ஆண்டுகளுக்கும் மேல் பழக்கத்தில் இருந்து வரும் நடைமுறையாகும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி ஆந்திரத்தைச் சோ்ந்த பக்தா் மணிக்குமாா் (36) கோயிலின் உள்ளே நுழைந்து வெளியே வரும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே இருதய நோய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், உடல் பருமனானவா்கள், உடல்நலக் குறைவு உள்ளவா்கள், வயது முதிா்ந்தவா்கள் கோயிலுக்குள் சென்று வழிபட தடை விதித்து கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, கோயில் முகப்பில் ஒரு அடி அகலம் கொண்ட நபா்கள் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் தடுப்பு கம்பிகள் செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டன. இதன் வழியாக நுழைந்து சென்றவா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments