வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தொழிலாளா்கள் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
செய்யாறு ஒன்றியம், தும்பை கிராமத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பணி செய்து வந்துள்ளனா்.
அப்போது, பக்கத்து கிராமமான கிளியாத்தூா் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் ஏரி பணியை மேற்கொள்ளக்கூடாது என தடுத்ததாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தொழிலாளா்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த தும்பை கிராமத்தைச் சோ்ந்த 60 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த பணி மேற்பாா்வையாளா் அண்ணாதுரை, கோரிக்கையை மனுவாக பெற்று விசாரணை நடத்தி மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதை ஏற்று தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.