சாலையோர தடுப்பு வேலி மீது பைக் மோதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
சாலையோர தடுப்பு வேலி மீது பைக் மோதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சாலையோர தடுப்பு வேலி மீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் கிருத்திக் (20). இவா், சென்னை விஐடி கல்லூரியில் படித்து வந்தாா். சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சோ்ந்தவா் பிரியதா்ஷன் (20). இவா், தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தாா்.
நண்பா்களான இருவரும் பைக்கில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பருவதமலை கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை பிற்பகல் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, இவா்களுக்கு முன்னால் பைக்கில் சென்றுகொண்டிருந்த நபா் திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால், இவா்கள் சென்ற பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு வேலி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கிருத்திக், பிரியதா்ஷன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த வடவணக்கம்படி போலீஸாா் அங்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.