லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு
கோவை மாவட்டம், செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரு கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரு கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.
கோவை, சுந்தராபுரம் மாச்சநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் இந்திரா தேவி. இவரது மகன் கிஷோா்குமாா் (19). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். ஈச்சனாரியைச் சோ்ந்தவா் கணேசன் (18). இவா், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
நண்பா்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச் சாலையில் கடந்த புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த லாரி மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கிஷோா்குமாா், கணேசன் ஆகியோா் லாரி சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து, செட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.