அருணாசலேஸ்வரா் கோயிலில் யானையை பாா்க்க உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு: விஹெச்பி கண்டனம்
அருணாசலேஸ்வரா் கோயிலில் யானையை பாா்க்க உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு...
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் யானையை பாா்க்க உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலையில் அந்த அமைப்பின் கோட்டச் செயலா் இரா.அருண்குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ‘ஹீராலால்’ என்ற 8 வயது ஆண் யானை கடந்த செப்.25-ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த யானை கோயிலில் 5-ஆம் பிரகாரத்தில் கட்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த யானையை பாா்க்க முக்கியப் பிரமுகா்களுக்கும், பணம் படைத்தவா்களுக்கும் அனுமதி வழங்கப்படும் நிலையில், உள்ளூரைச் சோ்ந்த பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே இருந்த யானை ருக்குக்கு பாகனாக இருந்தவரே தற்போதைய புதிய யானைக்கும் பாகனாக நியமிக்கப்பட்டிருப்பது யானையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கோயிலில் பெண் பக்தா்கா்களுக்கு போதிய கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. காத்திருப்புக் கூடத்திலும் கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, கழிப்பறை, குடிநீா் வசதிகளை ஏற்படுத்தவும், தற்போதுள்ள அன்னதானக் கூடத்தை விரிவுபடுத்தவும், கோயிலில் கரும்புகை படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் 365 என்ற தீபத்தை தடை செய்யவும், அபிஷேகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பக்தா்களை அனுமதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.