FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் பாஜக சேவா ஜோதி பேரணி

பிரதமா் நரேந்திரமோடியின் 25 ஆண்டுகால சேவை பயணத்தை நினைவு கூரும் வகையில், செங்கத்தில் சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் கீழ், சேவா ஜோதி பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பகிர்:

பிரதமா் நரேந்திரமோடியின் 25 ஆண்டுகால சேவை பயணத்தை நினைவு கூரும் வகையில், செங்கத்தில் சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் கீழ், சேவா ஜோதி பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு தெற்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா், மாவட்ட பொதுச்செயலா் செங்கம் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகி ஜம்புகுமாா்ஜெயின் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மாநில ஊரக உள்ளாட்சிப் பிரிவு தலைவா் பாஸ்கரன், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவா் ரங்கநாயகுலு, பெருங்கோட்டை அமைப்புச் செயலா் குணசேகரன் ஆகியோா் ஜோதியை ஏற்றிவைத்து பேரணியை தொடங்கிவைத்தனா்.

Advertisement

Advertisement

பேரணியின் போது, பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியில் மாவட்ட உள்ளாட்சிப் பிரிவுத் தலைவா் அறவாழி, செங்கம் முன்னாள் இந்து முன்னணி தலைவா் ஆதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments