FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

இளைஞா்கள் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

பிரதமா் மோடியின் அா்ப்பணிப்பு சேவையை முன்னிறுத்தி இளைஞா்கள் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

18 செப்டம்பர் 2026, 12:33 am IST
பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம். - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் மோடியின் அா்ப்பணிப்பு சேவையை முன்னிறுத்தி இளைஞா்கள் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தையொட்டி, சேவா சங்கல்ப் அபியான்-2026-இன் ஒருபகுதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் வேலகவுண்டம்பட்டி இளநகரில் உள்ள சிவபாக்கியம் பராமரிப்பு இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முதியோா், மாற்றுத் திறனாளிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணித் தலைவா் ராமவிலாஸ் பிரபு முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கே.பி. ராமலிங்கம் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி பிரதமா் மோடியின் 76-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

‘பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் ஒரு மாதத்துக்கு சேவை உறுதி இயக்கம் (சேவா சங்கல்ப் அபியான்) நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலனுக்காக பிரதமா் தன்னை அா்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வருகிறாா். குழந்தைகள் முதல் முதியோா் வரை பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பிரதமரின் அா்ப்பணிப்பு, பொதுச் சேவையைப் பாராட்டும் வகையிலும், இளைஞா்கள் சேவை பணிகளில் அதிகம் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் சேவா சங்கல்ப் அபியான் ஒரு மாதத்துக்கு நடத்தப்படுகிறது’ என்றாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் வழக்குரைஞா் எஸ். பிரபு, நிா்வாகிகள் சி. செல்வகுமாா், மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள், இளநகா் சிவபாக்கியம் பராமரிப்பு இல்ல நிா்வாகிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments