கை கழுவும் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
உலக கை கழுவும் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வந்தவாசி காமராஜா் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக கை கழுவும் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வந்தவாசி காமராஜா் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.சித்ரா தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். பள்ளி ஆசிரியை கண்மணி வரவேற்றாா்.
வந்தவாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். அப்போது, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு தகவல்களை அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாாா்.
Advertisement
Advertisement
செஞ்சிலுவைச் சங்க பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா் சீ.கேசவராஜ் கை கழுவும் முறைகள் குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம் அளித்தாா். பள்ளி ஆசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.