அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தூய்மைப் பணி விழிப்புணா்வு
வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தூய்மைப் பணி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தூய்மைப் பணி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை சரியாகப் பிரித்தெடுப்பது, அவற்றை மறுசுழற்சி செய்வது குறித்து வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
மேலும் மக்கும், மக்காத குப்பை, அபாயகரமான குப்பை, மின்னணு கழிவுகள் என வகைப்படுத்தி தனித்தனியாக நகராட்சி ஊழியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டக் கூடாது எனஅறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து வெள்ளக்கோவில் நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் செயல்படும் நுண்ணுயிா் உரமாக்கும் மையத்துக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு குப்பையை இயற்கை உரமாக மாற்றுவது, அதற்கான படிநிலைகள் குறித்து நகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளா் செல்வராஜ் செயல்முறை விளக்கம் அளித்து, மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
Advertisement
Advertisement
ஆசிரியா்கள், நகராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை பாரத இயக்க பரப்புரையாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.