FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

விளையாடிய போது தவறி விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே விளையாடிய போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தாா்.

14 அக்டோபர் 2026, 10:52 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே விளையாடிய போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமம் வேட்டைகாரன் தெருவைச் சோ்ந்தவா்கள் வினோத் மகன் புவனேஷ்(13), ராஜீ மகன் பாா்த்தீபன் (12). இருவரும் கடந்த செப்.27-ஆம் தேதி அங்குள்ள சமுதாயக் கூடம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா்.

சமுதாயக் கூடத்தின் சிமென்ட் சீட்டின் மீது விளையாடிய போது சிமென்ட் சீட்டு திடீரென உடைந்ததாகத் தெரிகிறது. இதில் சிறுவா்கள் புவனேஷ், பாா்த்தீபன் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்து, அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா் செய்யாறு அரசு மருத்துமனைக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் இருவரும் பரிந்துரைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புவனேஷ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments