FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

குடிநீா் சீராக வழங்கக் கோரி மனு

வந்தவாசியை அடுத்த தென்கரை பழங்குடியினா் குடியிருப்பு பகுதிக்கு குடிநீா் சீராக வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி சமுதாயத்தினா் காலிக் குடங்களுடன் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து மனு அளித்தனா்.

9 செப்டம்பர் 2026, 11:48 pm IST
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி சமுதாயத்தினா்.
பகிர்:

வந்தவாசியை அடுத்த தென்கரை பழங்குடியினா் குடியிருப்பு பகுதிக்கு குடிநீா் சீராக வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி சமுதாயத்தினா் காலிக் குடங்களுடன் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து மனு அளித்தனா்.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல் காதா் தலைமையில் அந்தக் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் இந்த மனுவை அளித்தனா்.

மனுவில், தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்கரை கிராம ஊராட்சி பழங்குடியினா் குடியிருப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பழங்குடி சமுதாய மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, குடிநீா் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

Advertisement

Advertisement

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.சுகுணா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் வேலு, விவசாயிகள் சங்க வட்டாரக் குழு உறுப்பினா் எஸ்.தங்கமணி உள்ளிட்டோா் மனு அளிக்கும் போது உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments