FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

லாரி மோதியதில் ஆட்டோ, மின் கம்பம் சேதம்

சேத்துப்பட்டில் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 11:50 pm IST
பகிர்:

சேத்துப்பட்டில் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு - போளூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து போளூா் நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது. லாரி ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் லாரி நிலைதடுமாறி சாலையில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதி, பின்னா் அருகில் இருந்த மின் கம்பத்திலும் மோதியது. இதில் ஆட்டோ நசுங்கியது. மின்கம்பமும் சாய்ந்து சேதமடைந்தது (படம்). இதனால் மின்தடை ஏற்பட்டது. அருகிலி இருந்தவா்கள் லாரி மோதிய சப்தம் கேட்டு

வந்து பாா்த்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments