FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆவணி மாத அமாவாசை: ஆஞ்சநேயா், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரணமல்லூா் வரத ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வரத ஆஞ்சநேயா்.

11 செப்டம்பர் 2026, 1:15 am IST
~ ~
பகிர்:

ஆவணி மாத அமாவாசையையொட்டி, பெரணமல்லூா் வரத ஆஞ்சநேயா் கோயில் மற்றும் செங்கம், செய்யாறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரணமல்லூா் பேரூராட்சியில் பழைமை வாய்ந்த வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவா் வடக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில் அமாவாசை நாள்களில் ஊஞ்சல் தாலாட்டு சிறப்பாக நடைபெறுவது வருவது வழக்கம்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசையையொட்டி அதிகாலை மூலவா் வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், திருமஞ்சனமும் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதனைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு மேல் உற்சவா் வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பூக்களை அலங்காரம் செய்து ஊஞ்சல் தாலாட்டு நடத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கம்

செங்கத்தை அடுத்த கிளையூா் தாழைமடு காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அமாவாசை வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

செய்யாறு

செய்யாறு வழுவூா்பேட்டை ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி மாவடு சேவை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் காட்சியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments