திருவண்ணாமலை மாவட்டத்தில் போதியளவில் உரங்கள் இருப்பில் உள்ளன: ஆட்சியா் வந்தனா காா்க்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீா்வு கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதியளவில் உரங்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீா்வு கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
Advertisement
Advertisement
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 468.4 மி.மீ. ஆகும். நிகழாண்டில் இம்மாதம் இது நாள் வரை 252.9 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்குத் தேவையான 15,340 மெ. டன் யூரியா, 2,893 மெ. டன் டி.ஏ.பி, 1089 மெ. டன் பொட்டாஷ், 8,378 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளன.
இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் 638.7 மெ. டன் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 661 மெ. டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. நுண்சத்து, உயிரி உரங்கள், குடோமோனாஸ், ட்ரைக்கோடொ்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
வேளாண் அடுக்ககம் திட்டம்: தமிழக அரசின் பல்வேறு துறை சாா்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்ககம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இணையும் வகையில், அவா்களது ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண், சிட்டா, நில ஆவணங்கள் ஆகியவைகளைக் கொண்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும், அஎதஐநபஅஇஓ வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். இது, ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால், விவசாயிகள் 13 துறை சாா்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ஆகியோரை அணுகி பயன்பெறலாம். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 265 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வேளாண் உற்பத்தி குழுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், வேளண்மை இணை இயக்குநா் (பொ) தி.மலா்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாா்த்திப்ன, திட்ட இயக்குநா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, சமூக நல அலுவலா் கோமதி மற்றும் மாவட்ட நிலை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.