FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

தமிழ்ச் சங்க சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

25 செப்டம்பர் 2026, 2:06 am IST
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் நா.முத்துவேலன்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வந்தவாசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் ஆ.மயில்வாகனன், தலைமை ஆசிரியா்கள் வி.எல்.ராஜன், சி.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒருங்கிணைப்பாளா் ம.ம.பழனி வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் க.சங்கா் குறளும் பொருளும் கூறினாா்.

Advertisement

Advertisement

அரசியல் பிழைத்தோா்க்கு அறமே கூற்றாகும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் நா.முத்துவேலன், ‘உரைசால் பத்தினியை உயா்ந்தோா் எத்துவா்’ என்ற தலைப்பில் ஆசிரியை கா.செந்தாமரைசெல்வி, ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்ற தலைப்பில் நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். மா.ஏழுமலை ஆகியோா் உரையாற்றினா்.

நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளா் த.முருகவேல், துணைத் தலைவா் சாமி.பிச்சாண்டி, தகவல் தொடா்பாளா் மு.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments