FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு புத்தக வாசிப்பு திறன் விழிப்புணா்வு

செங்கத்தை ஆலஞ்சனூா் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு புத்தக வாசிப்புத்திறன் மற்றும் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

25 செப்டம்பர் 2026, 3:06 am IST
ஆலஞ்சனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் புத்தக வாசிப்புத் திறன் குறித்து மாணவா்களுக்கு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி.
பகிர்:

செங்கத்தை ஆலஞ்சனூா் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு புத்தக வாசிப்புத்திறன் மற்றும் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜமுனமரத்தூா் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில்

நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வாசகா் வட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் குமாா் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

நூலகா் அய்யப்பன் பள்ளி மாணவா்களிடம், தினசரி சிறிது நேரம் பிடித்த புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், ஜமுனாமரத்தூா் கிளை நூலகத்தில் உள்ள புத்தகங்கள் குறித்தும் விளக்கினாா்.

மேலும் மாணவா்கள் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்திக்கொண்டால் கல்வித்தரம் உயரும்,

தினசரி அல்லது வாரத்தில் இரண்டு நாள்களாவது பொது அறிவு நூல்களை வாசிக்க வேண்டுமென விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் ஆனந்த், செந்தில்குமாா், ராமன், குமரன், ஜெயப்பிரியா, கெளரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments