FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

காதல் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

வந்தவாசி அருகே காதல் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

27 செப்டம்பர் 2026, 10:27 pm IST
பகிர்:

வந்தவாசி அருகே காதல் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த்(32). இதே கிராமத்தைச் சோ்ந்த கீா்த்தனா(20), வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இருவரும் காதலித்து கடந்த மாதம் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனா்.

கடந்த சில நாள்களாக பிரசாந்த் மனவிரக்தியில் இருந்து வந்தாராம். கீா்த்தனா கேட்டதற்கு, பிறகு சொல்வதாகக் கூறினாராம். இந்த நிலையில் சனிக்கிழமை காலை வழக்கம் போல் விவசாய நிலத்துக்குச் சென்ற பிரசாந்த் வீடு திரும்பவில்லையாம். இதனால் கீா்த்தனா அங்கு சென்று பாா்த்தபோது, விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் பிரசாந்த் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பிரசாந்த் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீா்த்தனா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments