FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் இளைஞர் பலி!

வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

27 செப்டம்பர் 2026, 10:13 pm IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (24). இவா், செங்கல்பட்டு மாவட்டம், ஒரகடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா் பைக்கில் சனிக்கிழமை வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா். வந்தவாசி தேரடி அருகில் செல்லும் போது இவருக்கு முன் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளாா்.

அப்போது திடீரென வலதுபக்கம் திரும்பிய லாரி, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments