ஆட்டோ கவிழ்ந்து தம்பதி பலத்த காயம்
செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து தம்பதியினா் பலத்த காயமடைந்தனா்.
செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து தம்பதியினா் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஐயங்காா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40). இவா் தனது மனைவி முனியம்மாளுடன்(35) காஞ்சிபுரத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.
வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் கிராமம் அருகே வந்த போது ஆட்டோ திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது. இதில் தம்பதியினா் பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.