FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

விவசாயி வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

செய்யாறு அருகே விவசாயி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகாா்

29 September 2026, 10:34 pm IST
பகிர்:

செய்யாறு அருகே விவசாயி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வந்தவாசி வட்டம் மோசவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி மனைவி இந்திராதேவி(43). இவா் செய்யாறில் வசித்து வருவதாகத் தெரிகிறது. மேலும், ஆக்.12-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு செய்யாறுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ளவா்கள் கதவு திறந்து இருப்பதாக இந்திராதேவிக்கு தகவல் தெரிவித்து உள்ளனா். அதன் பேரில் வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, வீட்டில் வைத்திருந்த

Advertisement

Advertisement

ஒரு ஜோடி தங்க கம்மல், வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, வெள்ளி குங்கும சிமிழ் உள்ளிட்ட 10 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது

இது குறித்து இந்திராதேவி பெரணமல்லூா் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments