FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

ஆம்பூர் மற்றும் கிராமப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஆம்பூர் மற்றும் கிராமப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே கடுமையான வெயில் நிலவி வந்தது.  கோடைக்காலம் போல கடுமையான வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  
இந்நிலையில், ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. 
 சூறாவளிக் காற்றுடன் தொடங்கிய கனமழை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. ஆம்பூர் அருகே சுற்றுப்புற கிராமங்களிலும் கனமழை பெய்தது.  
இதனால் ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமசந்திராபுரம் கிராமம் எட்டியம்மன் கோயில் அருகே இருந்த பழைமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதேபோல் பல்வேறு கிராமங்களிலும் மரங்கள் சாய்ந்தன.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக ஆம்பூர் நகரின் பெரும்பாலான தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments