கோயில்களில் அடிப்படை வசதிகள்: நீதிபதி ஆய்வு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கோயில்களில் அடிப்படை வசதிகள் குறித்து நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கோயில்களில் அடிப்படை வசதிகள் குறித்து நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் அடிப்படை வசதிகள் குறித்தும், இதர பணிகள் குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி பகுதியில் உள்ள முக்கிய கோயில்களை வேலூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியில் உள்ள பழனியாண்டவர் கோயில் மற்றும் பெரியபேட்டையில் உள்ள அழகுபெருமாள் கோயில்களில் அடிப்படை வசதிகள், பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, நீதிமன்றப் பணியாளர்கள், கோயில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.