பெரியோர் தொடர்பை விரும்பிக் கொள்ளுதல்
ஒல்லென்று ஒலிமுழங்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே!
பெரியார் பெருநட்புக் கோடல்; தாம் செய்த
அரிய பொறுப்பவென் றன்றோ?-அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
Advertisement
Advertisement
நல்லசெய் வார்க்குத் தமர்?
(பாடல் 77 அதிகாரம்: பொறை உடைமை)
ஒல்லென்று ஒலிமுழங்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! பெரியோர்களுடைய மேன்மையான தொடர்பினை யாவரும் விரும்பிக் கொள்ளுதல், 'தாம் செய்த பொறுத்தற்கரிய தவறுகளையும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்' என்றதனால் அல்லவோ? நல்லவைகளையே செய்பவர்களுக்கு நண்பராகச் சேருபவர்கள் அருமையானவர்களோ?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.