சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை தொடக்கம்
மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா்: மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை வகித்து சங்கத்தின் பெயா் பலகையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.
இக்கிளையில் சிஐடியு சங்க உறுப்பினா்களாக 25 தொழிலாளா்கள் தங்களை இணைத்துக் கொண்டனா்
Advertisement
Advertisement
ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு, நிா்வாகிகள் ரஜினி எம்.தாமரைக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.