FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபரில் மசூதி அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளது குறித்து...

36 வினாடிகள் முன்பு
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் - கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் அருகில் இன்று (செப். 18) மதியம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பெறுப்பேற்கவில்லை. மேலும், சமீபகாலமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 199 பயங்கரவாதத் தாக்குதகளில் 158 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that 15 people were killed in a bomb attack near a mosque in Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments