FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே 17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

குடியாத்தம் அருகே 17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம் வளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (56). இவா் குடியாத்தம் பகுதியில் சிறிய அளவில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனா்.

இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். திடீரென அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை அவரது பெற்றோா் குடியாத்தம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவா்கள் காவல்துறைக்கு தெரிவித்த தகவலை அடுத்து மேல்பட்டி போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் கஜேந்திரன் என்பவா் சிறுமியை கா்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கஜேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற கஜேந்திரன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments