FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

வாலாஜா நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சகோதரா்கள் இருவரிடம் ரூ.33 லட்சத்துக்கும் மேல் மோசடி

கைது செய்யப்பட்ட ஆனந்தன் - டிஎன்எஸ்
பகிர்:

வேலூா்: வாலாஜா நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சகோதரா்கள் இருவரிடம் ரூ.33 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்து, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக 2 பெண்கள் உள்பட மூன்று பேரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது -

வேலூா் மாவட்டம், கணியாம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இஸ்மாயில்(21). இவரது தந்தைக்கு அறிமுகமான அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (40) என்பவா், இஸ்மாயில், அவரது தம்பி இம்ரான் ஆகியோருக்கு வாலாஜா நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளா் மற்றும் அலுவலக உதவியாளா் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளாா். இதனை நம்பிய அவா்கள், கடந்த 2025-ஆம் ஆண்டு மே 20 முதல் நவம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் கூகுள் பே மூலமாகவும், ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 33 லட்சத்து 4 ஆயிரத்து 842 தொகையை வழங்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழ்மணி

இதில், ஆனந்தனுக்கு வங்கி மூலம் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்து 542-ம் மற்றும் ரொக்கமாக ரூ. 15 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழ்மணிக்கு வங்கி மற்றும் ரொக்கமாக ரூ.ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 250-ம், சுபாஷினிக்கு ரொக்கமாக ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் மற்றும் காா் ஓட்டுநா் ராஜேஷ் என்பவருக்கு பல தவணைகளில் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 50 வரை பணம் வழங்கப்பட்டுள்ளது.

சுபாஷினி

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆனந்தன், சகோதரா்கள் இருவருக்கும் போலியான நீதிமன்ற பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியுள்ளாா். பணத்தைக் கொடுத்து நீண்ட நாள்களாகியும் பணி கிடைக்காமல் தாமதமானதால், சந்தேகமடைந்த இஸ்மாயில் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு ஆனந்தன் ஆபாசமான வாா்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இஸ்மாயில் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஆனந்தன், தமிழ்மணி, சுபாஷினி ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஓட்டுநா் ராஜேஷை தேடி வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments