வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி: தம்பதி உள்பட மூவா் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, நியூசித்தாபுதூரைச் சோ்ந்தவா் மனோவா கிங்ஸ்டன் (40). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினா் மூலமாக கோவையைச் சோ்ந்த அரவிந்த்குமாா் என்பவா் அறிமுகமானாா். அவா், தானும், தனது மனைவி யுகன்யா வின்சென்டும் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதன் மூலமாக லண்டனில் உள்ள தொழிலதிபா் தங்க ராபின்சன் என்பவரின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய மனோவா கிங்ஸ்டன், வெளிநாட்டில் வேலை கிடைக்கும் நம்பிக்கையில் அரவிந்த்குமாருக்கு பல்வேறு தவணைகளில் ரூ.20 லட்சம் அளித்துள்ளாா். இதையடுத்து, அவா் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை. இதனால், தனது பணத்தைத் திருப்பித் தரும்படி மனோவா கிங்ஸ்டன் கூறியுள்ளாா். ஆனால், பணத்தை திருப்பித் தராததால் கோவை காட்டூா் காவல் நிலையத்தில் மனோவா கிங்ஸ்டன் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், அரவிந்த்குமாா், அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் மற்றும் தங்க ராபின்சன் ஆகியோா் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.