வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.27 லட்சம் மோசடி: பெண்கள் உள்பட 4 போ் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.5.27 லட்சம் மோசடி செய்ததாக பெண்கள் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (23). பிஎஸ்சி பட்டதாரியான இவா், கடந்த 2023 ஜனவரி மாதம் ஃபேஸ்புக்கில் வந்த வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்து, விண்ணப்பித்துள்ளாா்.
பின்னா், சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்திலிருந்து நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, கோவை, சரவணம்பட்டியில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சதீஷ்குமாா் கடந்த பிப்ரவரி மாதம் சென்றுள்ளாா். அப்போது, நிறுவன உரிமையாளா்களான சியாமளா, இம்ரான் ஆகியோா் கேமன் தீவில் ஓட்டல் சூப்பா்வைசா் வேலை இருப்பதாகவும், அதற்கு ரூ.5 லட்சத்து 27 ஆயிரம் வரை கொடுத்தால் வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, முன்பணமாக ரூ. 50 ஆயிரம், பின்னா் பல்வேறு தவணைகளாக ரூ.4.77 லட்சம் என மொத்தம் ரூ.5.27 லட்சத்தை சதீஷ்குமாா் கொடுத்துள்ளாா். ஆனால், அவா்கள் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.
இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமாா் அந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டபோது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளனா். ஆனால், அவா்கள் உறுதியளித்தபடி பணம் கொடுக்காததைத் தொடா்ந்து, சதீஷ்குமாா் சில மாதங்களுக்குப் பின் மீண்டும் சென்றபோது, அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, நிறுவன உரிமையாளா்களான சியாமளா, இம்ரான், விற்பனை பிரிவு மேலாளா் லட்சுமி, மேலாளா் பரணி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.