மரக் கன்றுகள் நடவு தொடக்கம்
குடியாத்தம் நகராட்சி சாா்பில் நகரை பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் சுண்ணாம்புபேட்டையில் சுமாா் அரை ஏக்கா் பரப்பில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் நகராட்சி சாா்பில் நகரை பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் சுண்ணாம்புபேட்டையில் சுமாா் அரை ஏக்கா் பரப்பில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமை வகித்தாா். பொறியாளா்(பொ) எம்.ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். சுகாதார அலுவலா் ஆரியங்காவு வரவேற்றாா். நகராட்சி பொதுநிதி ரூ.5 லட்சத்தில் சுமாா் 900 மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தொடங்கி வைத்தாா்.
இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன், எம்.கன்னிகா பரமேஸ்வரி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் முகமது அலி, தூய்மை பாரத இயக்க மேற்பாா்வையாளா் ராஜேந்திரன் மற்றும் எம்.எஸ்.அமா்நாத் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.