FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

கெளண்டன்யா ஆற்றின் கரைகளில் மரக் கன்றுகள் நடவு தொடக்கம்

மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ க.சிந்துஅழகப்பன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் டி.எஸ்.ரவிக்குமாா் உள்ளிட்டோா்.

8 அக்டோபர் 2026, 11:30 pm IST
பகிர்:

குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் குடியாத்தம் நகராட்சி ஆகியவை இணைந்து கெளண்டன்யா ஆற்றின் கரைகளில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

காமராஜா் பாலம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஆணையா் கே.எம்.தனலட்சுமி, மரக் கன்றுகளை வழங்கிய கொடையாளா் டி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குடியாத்தம் எம்எல்ஏ க.சிந்து அழகப்பன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் டி.எஸ்.ரவிக்குமாா், முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு மரக் கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கொண்டசமுத்திரம் ஊராட்சி பணியாளா்களுக்கும், ராபின்சன் குளம் ஊழியா்களுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments