தொழிலாளா்களுக்கு காசநோய் விழிப்புணா்வு
குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனமும், அரசு மருத்துவமனையும்இணைந்து பொன்னம்பட்டியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு காசநோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு கல்வி அளிக்கப்பட்டது.
குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனமும், அரசு மருத்துவமனையும்இணைந்து பொன்னம்பட்டியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு காசநோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு கல்வி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் காசநோய் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளா் சவரிமுத்து, பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன்ஆகியோா் விளக்க உரையாற்றினா். அவா்கள் பேசுகையில், காசநோயின் அறிகுறிகள், நோய் பரவும் விதம், காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறும் முறைகள், காசநோயைத் தவிா்க்க உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகள் குறித்து விளக்க உரையாற்றினா்.
மேலும், காசநோய்க்கு அரசு சாா்பில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகள் குறித்தும் தொழிலாளா்களுக்கு எடுத்துரைத்தனா். காசநோய் அறிகுறிகள் தெரிய வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.