கல்லூரியில் கருத்தரங்கம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தரவு அறிவியல் துறைகள் சாா்பில், கல்லூரிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு - ஐசீல்’26‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தரவு அறிவியல் துறைகள் சாா்பில், கல்லூரிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு - ஐசீல்’26‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா் தலைமை வகித்தாா். பேராசிரியா் பி.அஞ்சுகம் வரவேற்றாா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் த.மணிகண்டன், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சித்தூா் அப்போலோ பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை பேராசிரியா் சி.கவிதா செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவில் ஆழ்ந்த கற்றலில் பொருள் கண்டறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
மேலும், இக்கருத்தரங்கில் கட்டுரை, இணையதளம் அலங்கரித்தல், பிழை திருத்துதல், படைப்பாற்றல், புதிா் போட்டி, புகைப்படப் பதிவு, விளம்பரம் காட்சிப்படுத்துதல், சிந்தனை வெளிப்படுத்துதல் போன்ற தகவல் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனா். கருத்தரங்கில், வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெற்றனா்.
Advertisement
Advertisement
கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியா் எஸ்.பவித்ரா நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.