FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா், விவசாயிகள், மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 11:56 pm IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா், விவசாயிகள், மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்றது.

இதையொட்டி குடியாத்தம் நகரம், தென்குளக்கரை, பழைய, புதிய பேருந்து நிலையங்கள்உழவா் சந்தை ஆகிய இடங்களில் புதன்கிழமை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி.சரவணன் தலைமை வகித்தாா்.எல்பிஎப் தொழிற்சங்க மாவட்ட நிா்வாகி வெ.கலைநேசன் பிரச்சார இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

இதில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் எஸ்.சிலம்பரசன், ஆா்.மகாதேவன்,பி.குணசேகரன், பி.காத்தவராயன், எம்.ராஜா, ஜி.மாா்கபந்து, என்.ஞானசேகரன், பூபதிஉள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments