ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிக்கு வேலூா் ஒரே மாவட்டத்தில் பணி வாய்ப்பு
கணவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (எஸ்.பி.), மனைவி மாநகராட்சி ஆணையா் என ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிக்கு வேலூா் மாவட்டத்திலேயே பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கணவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (எஸ்.பி.), மனைவி மாநகராட்சி ஆணையா் என ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிக்கு வேலூா் மாவட்டத்திலேயே பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்ட எஸ்.பி.யாக ஐபிஎஸ் அதிகாரி என்.யு.சிவராமன் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா வேலூா் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே 14 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், வேலூா் மாநகராட்சி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி கேத்ரின் சரண்யா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக இருந்த நிலையில் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.
அதேசமயம், இவரது கணவரும், ஐபிஎஸ் அதிகாரியுமான என்.யு. சிவராமன் ஏற்கனவே வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா வேலூா் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்க உள்ளாா். இதன் மூலம் கணவரும், மனைவியும் ஒரே மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவராமன், கடந்த பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டாா். 2021-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகரியான இவா் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். அவரது மனைவி கேத்ரின் சரண்யாவும் தமிழகத்தைச் சோ்ந்தவா்தான். 2021-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகரியான இவா் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்ஸி கணிதம் படித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.