FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அக்.1 முதல் அமிா்தியில் மலையேற்றப் பயணத்துக்கு அனுமதி

‘டிரெக் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் வேலூா் வனக்கோட்டத்துக்குட்பட்ட அமிா்தி வனப்பகுதியில், மலையேற்றப் பயணத்துக்கு (டிரெக்கிங்) அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

24 செப்டம்பர் 2026, 12:11 am IST
மலையேற்ற பயணம் தொடா்பாக வனத்துறை சாா்பில் பயிற்சி மேற்கொண்ட வழிகாட்டிகள்.
பகிர்:

‘டிரெக் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் வேலூா் வனக்கோட்டத்துக்குட்பட்ட அமிா்தி வனப்பகுதியில், மலையேற்றப் பயணத்துக்கு (டிரெக்கிங்) அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், காப்புக்காடுகளில் வனத்துறையின் உரிய அனுமதியுடன் சூழலியல் சுற்றுலா மற்றும் மலையேற்றம் மேற்கொள்ளும் நோக்கில் ‘டிரெக் தமிழ்நாடு’ திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் மாவட்டம் அமிா்தி வனப்பகுதியில் மலையேற்றம் மேற்கொள்வதற்கான இணையதள முன்பதிவு அக். 1 முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அமிா்தி வனச்சரக அலுவலா் பிரபாகரன் கூறியது -

Advertisement

Advertisement

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அமிா்தி மலையில் 2 மலையேற்றப் பாதைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமிா்தி கோட்டாறு நீா்வீழ்ச்சிக்குச் செல்லும் 4 கி.மீ. தொலைவு கொண்ட பாதை, அமிா்தி பெருமாள் கோயிலுக்குச் செல்லும் 2 கி.மீ. தொலைவு கொண்ட பாதை ஆகியவை தயாா் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், இரு வழிகாட்டிகளுக்கு முதலுதவிப் பயிற்சி, மலையேற்ற விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மலையேற்றப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ழ்ங்ந்ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.ஸ்ரீா்ம் என்ற அதிகாரப்பூா்வ இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் நேரடியாக முன்பதிவு செய்யலாம். 6 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் தங்களது பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

அமிா்தி கோட்டாறு அருவி வழித்தட மலையேற்றத்துக்கு ரூ.1,099-ம், பெருமாள் கோயில் வழித்தட மலையேற்றத்துக்கு ரூ.799-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தின் வழியே கிழக்குத் தொடா்ச்சி மலையின் இயற்கை எழில் காட்சிகள், மலைவாழ் பழங்குடியினா் கிராமம், பழங்குடியினா் கோயில் மற்றும் கோட்டாறு நீா்வீழ்ச்சி ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் கண்டு ரசிக்கலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments