தண்டவாளம் அருகே தொழிலாளி சடலம்: கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தகவல்
ரயில் முன் பாய்ந்து இறந்ததாகக் கருதப்பட்ட கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமாகத் தெரியவந்ததுள்ளது.
ரயில் முன் பாய்ந்து இறந்ததாகக் கருதப்பட்ட கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமாகத் தெரியவந்ததுள்ளது.
நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் அய்யப்பன் (47). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவரது சடலம் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சிங்காநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் மீட்கப்பட்டது.
இது குறித்து ரயில்வே போலீஸார், சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அய்யப்பனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அய்யப்பனின் உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் இறந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், அய்யப்பனை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் அவரது உடலை மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரியவந்தது. சிங்காநல்லூர் போலீஸார் இது தொடர்பான தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.