FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குப்பேபாளையம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்

அன்னூர் ஒன்றியம், குப்பேபாளையம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அன்னூர் ஒன்றியம், குப்பேபாளையம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் ஏழுமலை முன்னிலை வகித்தார். அன்னூர் வட்டாட்சியர் பழனிசாமி வரவேற்றார். இந்த முகாமில் குப்பேபாளையம் பகுதி பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 84 மனுக்கள் ஏற்கப்பட்டு அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 
மேலும் இந்த முகாமில் 87 பயனாளிகளுக்கு ரூ.7.32லட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி, சமூக நல அலுவலர் தங்கமணி, வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments